பவானியில் குழந்தைக்கு நீச்சல் கற்றுத்தர சென்றவர் நீரில் மூழ்கி சாவு

பவானியில் குழந்தைக்கு நீச்சல் கற்றுத்தர சென்றவர் நீரில் மூழ்கி சாவு
X

பவானி ஆறு.

பவானி ஆற்றில் குழந்தைக்கு நீச்சல் கற்றுத்தர சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குமாரபாளையம் அடுத்த பவானி அருகே ஜம்பை துருசாம்பாளையத்தை சேந்தவர் குமாரசாமி மகன் சக்திவேல் (40). எலெக்ட்ரிசியன் வேலை செய்து வருகிறார். நேற்றுமுன்தினம் மாலை 4 மணியளவில் தனது குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுத்தருவதற்காக பவானி ஆற்றுக்கு அழைத்து சென்றார்.

தற்போது பவானி சாகர் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வேகமாக ஓடி வருகிறது. இவர் தளவாய்பேட்டை, வைரமங்கலம் பகுதியில் பவானி ஆற்றில் பாலத்துக்கு கீழே தண்ணீரில் சென்ற வாழை மரத்தை பிடிக்க சென்றபோது, தண்ணீரின் வேகத்தில் அடித்து செல்லப்பட்டார்.

இதைக்கண்ட குழந்தைகள் சத்தம் போட்டனர். சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது சக்திவேல் தண்ணீரில் அடித்து செல்லபட்டது தெரியவந்தது. பொதுமக்கள் ஆற்றின் கரையோரப்பகுதியில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் நேற்று நீரேற்று நிலையம் பகுதியில் சக்திவேலின் உடல் மீட்கப்பட்டது. இது குறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture