குமாரபாளையத்தில் டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் படுகாயம்

குமாரபாளையத்தில் டூவீலர் மீது லாரி மோதிய   விபத்தில் இருவர் படுகாயம்
X

குமாரபாளையம் காவல் நிலையம் பைல் படம்.

குமாரபாளையம் அருகே டூவீலர் மீது தண்ணீர் லாரி மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் குட்டிக்கினத்தூர் பகுதியை சேர்ந்தவர் குணமூர்த்தி (வயது 30.). கூலி தொழிலாளி. நேற்றுமுன்தினம் இரவு 07:00 மணியளவில் இவர் தனது டூவீலரில் பின்னால் உட்கார்ந்து வர, இதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி செங்கமா முனியப்பன் கோவில் அருகே வண்டியை ஓட்டி வந்தார். அப்போது எதிரில் வந்த தண்ணீர் டேங்கர் லாரி மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இருவரும் படுகாயமடைந்ததில் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுனர் அதே பகுதியை சேர்ந்த அறிவழகனை கைது செய்து குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!