குமாரபாளையம் அருகே குடிநீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளி கொலை

குமாரபாளையம் அருகே குடிநீர் பிடிப்பதில் ஏற்பட்ட  தகராறில் கூலி தொழிலாளி கொலை
X

கொலை செய்யப்பட்ட சுப்ரமணி.

குமாரபாளையம் அருகே குடிநீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டதில் கூலித் தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.

குமாரபாளையம் அருகே குடிநீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டதில் கூலித் தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.

குமாரபாளையம் ஆனங்கூர் சாலை, ஒட்டன்கோவில் பகுதியில் வசிப்பவர் சுப்ரமணி, (வயது48)கூலி தொழிலாளி. இவரது வீட்டிற்கும், இவரது வீட்டின் அருகே உள்ள மோகன் (வயது42) என்பவர் வீட்டிற்கும் பொதுவாக குடிநீர் குழாய் உள்ளது. இதில் தண்ணீர் பிடிக்கும் போது இரு தரப்பினருக்கும் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மோகன், மற்றும் இவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ்,( 42,) கோபாலகிருஷ்ணன், (31,) ஆகியோர், சுப்ரமணியை பார்த்து கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். நேற்று இரவு 07:00 மணியளவில் கடைக்கு போய் சாமான் வாங்கி வருவதாக சுப்ரமணி கூற, மனைவி பருவதம், மகன் தினா ஆகிய இருவரும், வேண்டாம், இந்நேரத்தில் தனியாக போக வேண்டாம், நாளை கடைக்கு போகலாம் என்று கூறி தடுத்துள்ளனர்.

ஆனால் அதை கேட்காமல், ஒன்றும் ஆகாது, நான் போய் வருகிறேன் என்று கூறி கடைக்கு சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பருவதம் தன் மருமகன் செவ்வராஜ் என்பவருக்கு தகவல் கொடுக்க, அவரும் நேரில் வந்து பல இடங்களில் தேடினார். அதிகாலை 03:00 மணியளவில், அதே பகுதியில் உள்ள மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் படுகாயங்களுடன், ரத்த வெள்ளத்தில் சுப்பிரமணி இறந்து கிடந்துள்ளார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, குமாரபாளையம் போலீசார் நேரில் சென்று சடலத்தை மீட்டனர். பருவதம் போலீசில் ஏற்கனவே , கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது புகார் கொடுக்க, இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மூவரையும் கைது செய்தனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா