குமாரபாளையத்தில் 'ஏ' கிரேடு சான்றிதழ் தேர்வு: என்.சி.சி., மாணவர்கள் பங்கேற்பு

குமாரபாளையத்தில் ஏ கிரேடு சான்றிதழ் தேர்வு: என்.சி.சி., மாணவர்கள் பங்கேற்பு
X

குமாரபாளையத்தில் என்.சி.சி. சார்பில் ஏ கிரேடு எழுத்து, செய்முறை தேர்வு நடைபெற்றது.

குமாரபாளையத்தில் என்.சி.சி. சார்பில் ‘ஏ’ கிரேடு எழுத்து, செய்முறை தேர்வு நடைபெற்றது.

குமாரபாளையத்தில் என்.சி.சி. சார்பில் 'ஏ' கிரேடு எழுத்து, செய்முறை தேர்வு நடைபெற்றது.

என்.சி.சி.யில் சேர்ந்து 2 ஆண்டு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு 'ஏ' கிரேடு எழுத்து, செய்முறை தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. குமாரபாளையத்தில் நடைபெற்ற இந்த தேர்வில் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம்.லட்சுமியம்மாள் மெட்ரிக் பள்ளி, ஜே.கே.கே. ரங்கம்மாள் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, சித்தோடு அரசு மேல்நிலைப்பள்ளி, பர்கூர் மலைவாழ் மக்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த 155 மாணவ, மாணவியர்கள் இதில் பங்கேற்றனர். செய்முறை தேர்வில் துப்பாக்கியை பிரித்து பூட்டுதல், நடைபயிற்சி, வரைபட பயிற்சி, தூரத்தை கணக்கிடுதல் ஆகியவைகளை மாணாக்கர்கள் செய்தனர்.

இது பற்றி ஈரோடு 15வது பட்டாலியன் கமாண்டிங் அலுவலர் லெப்டினன்ட் கர்னல் அனில்வர்மா கூறியதாவது:- இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் ராணுவம் மற்றும் காவல்துறையில் 2 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் நிர்வாக அலுவலர் லெப்டினன்ட் கர்னல் கிருஷ்ணமூர்த்தி, சுபேதார் மேஜர் செந்தில்குமார், சுபேதார் ராம்குமார், ஹவில்தார் மேஜர் சதீஸ்குமார், ஹவில்தார் சதீஷா, என்.சி.சி. அலுவலர்கள் அந்தோணிசாமி, முருகேஸ்வரி, முருகேசன், ராஜேஷ்குமார், சிவகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story