நடிகர் விஜய் பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க நாணயம்

நடிகர் விஜய் பிறந்த நாளில் பிறந்த  குழந்தைகளுக்கு தங்க நாணயம்
X

விஜய் பிறந்த நாளையொட்டி குழந்தைகளுக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டது.

குமாரபாளையத்தில் விஜய் பிறந்த நாளன்று அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டது.

குமாரபாளையத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் ஜூன் 22 ஆம் தேதி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டது.

தமிழ் திரை உலகில் இளைய தளபதி என போற்றப்படுபவர் நடிகர் விஜய். ஜூன் 22 நடிகர் விஜய்யின் பிறந்த நாள் ஆகும். இதனையொட்டி அவரது ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தினர் அவரது பிறந்த நாளை பல்வேறு வகையில் கொண்டாடினர். குமாரபாளையத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் நடிகர் விஜய்யின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் ஜூன் 22ஆம் விசைத்தறி கூலி தொழிலாளி அசோக்குமார், -ஈழத்தமிழ் தம்பதியினர் மற்றும் தச்சு தொழிலாளி மணி-கெளசல்யா ஆகிய இரு தம்பதியினருக்கு பிறந்த குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் மதிப்பிலான தங்க நாணயங்களை வழங்கினர்.

மேலும் காவேரி நகர் பகுதியில் கேக் வெட்டியும் ஆதரவற்ற முதியோர் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும் கொண்டாடினர். மேலும் காலதாமதம் செய்யாமல் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் எனவும் ஆவலுடன் காத்திருப்பதாக விஜய் ரசிகர்கள் தெரிவித்தனர்.

இந்த விழாவிற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட இணையதள செயலாளர் சோமு தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் விக்கி, குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் மற்றும் தளபதி மக்கள் இயக்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் AI பற்றி நீங்களும்  தெரிந்து கொள்ளுங்கள்!