100 பெண் குழந்தைகளுக்கு தலா ஆயிரம் : வங்கி கணக்கில் செலுத்திய டாக்டர்

100 பெண் குழந்தைகளுக்கு தலா   ஆயிரம் : வங்கி கணக்கில் செலுத்திய டாக்டர்
X

குமாரபாளையம் கிழக்கு காலனியில் ஜோ மருத்துவமனை நடத்தி வரும் டாக்டர் நடராஜன், 100 பெண் குழந்தைகளுக்கு தலா ஆயிரம் ரூபாய், செல்வமகள் திட்டத்தில் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தி வாழ்த்தினார்.

குமாரபாளையம் தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவர் 100 பெண் குழந்தைகளுக்கு தலா ஆயிரம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தினார்.

குமாரபாளையம் தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவர் 100 பெண் குழந்தைகளுக்கு தலா ஆயிரம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தினார்.

குமாரபாளையம் கிழக்கு காலனியில் ஜோ மருத்துவமனை நடத்தி வருபவர் டாக்டர் நடராஜன். இவர் பல வருடங்களாக பலருக்கு தன்னால் ஆன உதவிகளை மாணவ, மாணவியர்களுக்கு செய்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக 100 பெண் குழந்தைகளுக்கு தலா ஆயிரம் ரூபாய், செல்வமகள் திட்டத்தில் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தி வாழ்த்தினார். இதற்கான விழாவில் நகர தி.மு.க. செயலர் செல்வம், துணை செயலர் ரவி, மக்கள் நீதி மய்யம் மகளிரணி நிர்வாகிகள் சித்ரா, உஷா உள்பட பலர் பங்கேற்றனர்.

தமிழக அரசின் சார்பில் குழந்தைகள் நலனுக்காக, மாணவ, மாணவியர் நலனுக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு கட்டமாக அங்கன்வாடி குழந்தைகளுக்காக ஊட்டச்சத்து வழங்கப்பட்டு வருகிறது. தி.மு.க. மாவட்ட செயலர் மதுரா செந்தில் அறிவுறுத்தலின்படி, அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம், கலைவாணி தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு கவுன்சிலர் கோவிந்தராஜ் பங்கேற்று ஊட்டச் சத்து உணவு வழங்கினார்.

ஊட்டச்சத்து குறித்து டாக்டர்கள் கூறியதாவது:

ஊட்டச்சத்து என்பது வாழ்க்கைக்கு ஆதாரமான அத்தியாவசிய மூலப்பொருள்களை உயிரணுக்களுக்கும், அதன்மூலம் உயிரினங்களுக்கும் வழங்குகின்ற ஓர் உணவு ஆகும். ஊட்டச்சத்து வைட்டமின்கள், தாது உப்புக்கள், புரதம் ,கொழுப்பு என பல ஊட்டக்கூறுகள் இதில் இடம்பெற்றிருக்கும்.

பல பொதுவான சுகாதார பிரச்சினைகளை ஆரோக்யமான உணவைக் கொண்டு தவிர்த்து முடியும். ஊட்டச்சத்து, ஊட்டக்கூறு என்ற இரண்டுமே ஊட்டச்சத்து என அழைக்கப்படுவதுண்டு. ஊட்டச்சத்து என்பது உயிர்வேதியியல் மற்றும் உடலியல் செயல்முறையாகும். இச்செயல்முறையின் மூலம் ஓர் உயிரினம் தனது வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள உணவைப் பயன்படுத்துகிறது.

ஊட்டச்சத்து என்பது உயிர்வேதியியல் மற்றும் உடலியல் செயல்முறையாகும், இதன் மூலம் ஒரு உயிரினம் தனது வாழ்க்கையை ஆதரிக்க உணவைப் பயன்படுத்துகிறது. இச்செயல் முறை உயிரினங்களுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காததால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!