தீபாவளி கூட்டம் கண்காணிக்க அமைக்கப்படும் போலீசார் உயர் கோபுரம்!

தீபாவளி கூட்டம் கண்காணிக்க அமைக்கப்படும்   போலீசார் உயர் கோபுரம்!
X

படவிளக்கம் : குமாரபாளையம் போலீசார் சார்பில் தீபாவளி கூட்டம் கண்காணிக்க உயர் கோபுரம் அமைக்கப்படுகிறது.

குமாரபாளையம் போலீசார் சார்பில் தீபாவளி கூட்டம் கண்காணிக்க உயர் கோபுரம் அமைக்கப்படுகிறது.

தீபாவளி கூட்டம் கண்காணிக்க அமைக்கப்படும் போலீசார் உயர் கோபுரம்

குமாரபாளையம் போலீசார் சார்பில் தீபாவளி கூட்டம் கண்காணிக்க உயர் கோபுரம் அமைக்கப்படுகிறது.

தீபாவளிக்கு ஆடைகள், நகைகள், டி.வி. பீரோ, கட்டில், உள்ளிட்ட வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க பொதுமக்கள் கடைகளில் அதிகம் கூடுவது வழக்கம். தீபாவளிக்கு ஏழை, எளியோர் துணிமணிகள் வாங்க, சாலையோர துணிக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கஷ்டப்பட்டு துணிமணிகள், பட்டாசு உள்ளிட்ட பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களிடம், கூட்டத்தை சாதகமாக பயன்படுத்தி, பணத்தை திருடி செல்ல பல கும்பல்கள் சுற்றி வருவார்கள். அப்பாவி பொதுமக்களிடம் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பியோடும் சமூக விரோதிகளை கண்காணிக்க, குமாரபாளையம் நகரில் பஸ் ஸ்டாண்ட், பள்ளிபாளையம் பிரிவு சாலை, ஆனங்கூர் பிரிவு சாளை, ராஜம் தியேட்டர் ஆகிய இடங்களில் உயர் கோபுரங்கள் அமைத்து, அதில் நின்றவாறு போலீசார் கூட்டத்தை கண்காணிப்பது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு தீபாவளிக்கு கூட்டத்தை, மர்ம நபர்களை கண்காணிக்க சி.சி.டி.வி. கேமராவுடன் கூடிய உயர்கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

குமாரபாளையத்தில் ராகிங்கிற்கு எதிரான விழிப்புணர்வு முகாம் நடந்தது.

குமாரபாளையம் போலீசார் சார்பில் ராகிங்கிற்கு எதிரான விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் இன்ஸ்பெக்டர் தவமணி பங்கேற்று விழிப்புணர்வு கருத்துக்களை பேசினார்.

இவர் பேசியதாவது:

மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொண்டு எந்த மாணவர் அல்லது மாணவர்கள் பேசும் அல்லது எழுதப்பட்ட வார்த்தைகளால் அல்லது ஒரு புதிய மாணவர் அல்லது வேறு எந்த மாணவரை கேலி செய்வது, நடத்துவது அல்லது முரட்டுத்தனமாக கையாளுதல் கூடாது. மாணவர் அல்லது மாணவர்களால் ரவுடி அல்லது ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடுவது, எரிச்சல், கஷ்டம் அல்லது உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்துதல் கூடாது. பயம் அல்லது அச்சத்தை ஏற்படுத்துதல் அல்லது மாணவர்களிடம் கூறுதல், வெட்க உணர்வு, அல்லது வேதனை அல்லது சங்கட உணர்வு, அதனால் ஒரு புதிய மாணவர் அல்லது வேறு எந்த மாணவரின் உடலமைப்பு அல்லது ஆன்மாவை மோசமாக பாதிக்கும் வகையில், நடந்து கொள்ள கூடாது. ஒரு துன்பகரமான இன்பத்தைப் பெறுவதற்கான நோக்கத்துடன், ஒரு மாணவரின் அதிகாரம் அல்லது மேன்மையைக் காட்டுதல்தான் ராகிங். நாட்டிலுள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும், அதன் மூலம், அனைத்து மாணவர்களின் உடல் மற்றும் உளவியல் ரீதியிலான ஆரோக்கியமான வளர்ச்சியை ஏற்படுத்த, பல்கலைக்கழக மானியக் குழு, கவுன்சில்களுடன் கலந்தாலோசித்து, இந்த ராகிங் ஒழுங்குமுறையை கொண்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!