மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டுகள் வழங்கும் விழா

பவானி ஸ்ரீ ஐயப்ப சுவாமி சேவா நலச் சங்கம் சார்பாக பவானி மற்றும் குமாரபாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்புக் வழங்கும் விழா நடந்தது.
குநாரபாளையம் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்புக் வழங்கும் விழா நடந்தது.
பவானி ஸ்ரீ ஐயப்ப சுவாமி சேவா நலச் சங்கம் சார்பாக பவானி மற்றும் குமாரபாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்புக் வழங்கும் விழா ஸ்ரீ ஐயப்ப சுவாமி சேவா நலச் சங்க கட்டிடத்தில் நடந்தது. விழாவுக்கு சங்க தலைவர் பிரபாத் மகேந்திரன் தலைமை வகித்தார்.
பவானி மற்றும் குமாரபாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் 600 ஏழை மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்புக் வழங்கப்பட்டது. பவானி பிரபாத் ஜே.கே.நாராயணன் பொதுநல அமைப்பின் சார்பாக பவானி மற்றும் குமாரபாளையம் பகுதியில் உள்ள 18 அரசு பள்ளியில் பயிலும் 750 மாணவ-மாணவிகளுக்கு ஸ்ரீ ஐயப்ப சுவாமி சேவா நலச் சங்க கட்டிடத்தில் இலவச சீருடை வழங்க முடிவு செய்யப்பட்டது. மாதேஸ்வரன், ராம்ராஜ், இன்ஜினியர் தண்டபாணி, வேல்முருகன். தளிர்விடும் பாரதம் சீனிவாசன், செல்வம், ஜோதிமுருகன், மேனகா, நாராயணன் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu