டூவீலர் மீது கார் மோதியதில் தாய் கண் முன்னே யூ.கே.ஜி.மாணவர் உயிரிழப்பு

டூவீலர் மீது கார் மோதியதில் தாய் கண் முன்னே  யூ.கே.ஜி.மாணவர் உயிரிழப்பு
X

சாலை விபத்தில் இறந்த பிரகாஷ் கண்ணன்.

குமாரபாளையத்தில் டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் யூ.கே.ஜி.மாணவர் தாய் கண் முன் உயிரிழந்தான்.

குமாரபாளையத்தில் டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் யூ.கே.ஜி.மாணவன் உயிரிழந்தான்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வத்தவர் பிரகாஷ்கண்ணன் (வயது5.) இவரை இவரது தாத்தா கோவிந்தன், அம்மா திவ்யா இருவரும் நேற்று மாலை 03:50 மணியளவில் டூவீலரில், டூவீலரின் பெட்ரோல் டேங்க் மீது பிரகாஷ்கண்ணனை உட்கார வைத்துகொண்டு சேலம், கோவை புறவழிச்சாலையில் கத்தேரி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பின்னால் வேகமாக வந்த கார் இவர்கள் வந்த டூவீலர் மீது மோதியதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர். மோதிய கார் நிற்காமல் சென்று விட்டது. பலத்த காயமடைந்த மூவரையும் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்தனர். வரும் வழியில் மாணவன் பிரகாஷ் கண்ணன் உயிரிழந்தான்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கோவிந்தன் ஈரோடு குமாரபாளையத்தில் இருந்து ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டுள்ளார். திவ்யா குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் ஒருவழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிரகாஷ் கண்ணனின் தந்தை நவீன் பந்தல் வேலை செய்து வருபவர் என்பதும், இவர்கள் அனைவரும் கத்தேரி பிரிவு சாலை அருகே உள்ள விஜயநகர் காலனியில் வசித்து வருவதாகவும் போலீசார்நடத்திய விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

சாலை விபத்தில் தாய் மற்றும் தாத்தா கண் முன் சிறுவன் பிரகாஷ் கண்ணன் இறந்த சம்பவம் குமார பாளையத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்துக்கு காரணமான கார் டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags

Next Story
மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் AI பற்றி நீங்களும்  தெரிந்து கொள்ளுங்கள்!