குமாரபாளையத்தில் டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்

குமாரபாளையத்தில் டூவீலர் மீது கார் மோதிய   விபத்தில் ஒருவர் படுகாயம்
X
குமாரபாளையம் போலீஸ் நிலையம் பைல் படம்.
குமாரபாளையத்தில் கார், டூவீலர் மீது மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.

குமாரபாளையம் சுந்தரம் நகரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 39.) டிரைவர். இவர் நேற்றுமுன்தினம் காலை 10:00 மணியளவில் தனது ஹோண்டா ஆக்டிவா வாகனத்தில் குமாரபாளையம் நோக்கி வந்து கொண்டிருக்கும் போது, எதிரே வேகமாக வந்த இண்டிகா கார் இவரது வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. பலத்த காயமடைந்த பழனிசாமி ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான காரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது