குமாரபாளையத்தில் டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் இருவர் படுகாயம்

குமாரபாளையத்தில் டூவீலர் மீது கார் மோதிய விபத்தில்   இருவர் படுகாயம்
X

குமாரபாளையம் காவல் நிலையம் பைல் படம்.

குமாரபாளையத்தில் டூவீலர், கார் மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.

குமாரபாளையம் அருகே நேரு நகரில் வசிப்பவர் அஜித் குமார்(வயது 19.) கட்டுமான கூலி தொழிலாளி. இவர் தன் அண்ணனின் டி.வி.எஸ். சுசுகி வாகனத்தில் சேலம் கோவை புறவழிச்சாலையில் நேரு நகர் பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது சேலம் பக்கமிருந்து வேகமாக வந்த மாருதி பொலிரோ கார், டூவீலர் மீது மோதியதில் அஜித்குமார் படுகாயமடைந்தார். குமாரபாளையம் போலீசார் விசாரணையில் கார் ஓட்டுனர் கோவையை சேர்ந்த தீயணைப்பு படை வீரர் கணேஷ்பாபு, (36,) என்பது தெரியவந்தது. இது குறித்து எஸ்.ஐ. மலர்விழி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இவ்விபத்தில் கணேஷ்பாபுவிற்கும் காயமேற்பட்டதால் இவர் ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா