நள்ளிரவில் தீ விபத்து; கார், டூவீலர் வாகனங்கள் எரிந்து சேதம்!

நள்ளிரவில் தீ விபத்து; கார், டூவீலர் வாகனங்கள் எரிந்து சேதம்!
X

குமாரபாளையம் அருகே நள்ளிரவில் தீ விபத்தில் கார் எரிந்து சேதமானது.   

குமாரபாளையம் அருகே நள்ளிரவில் தீ விபத்தில் கார் மற்றும் டூவீலர் வாகனங்கள் எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரிக்கிறார்கள்.

நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் எரிந்து சேதம்

குமாரபாளையம் அருகே நள்ளிரவில் ஏற்பட்ட எதிர்பாராத தீ விபத்தில் கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

குமாரபாளையம் அருகே உள்ள ஓலப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் தினேஷ், 25. இவர் தனியார் நிறுவனங்களுக்கு கணக்குகளை சரிபார்க்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் வழக்கம்போல் இரவு 10:00 மணிக்கு வீட்டுக்கு சென்ற தினேஷ், கார் நிறுத்தும் இடத்தில் தனது இரண்டு சக்கர வாகனம் நிறுத்திவிட்டு இரவு உறங்க சென்று விட்டார். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் தினேஷ் வீட்டு பகுதியில் இருந்து திடீரென புகை வருவதைக் கண்ட எதிர்வீட்டினர், தினேஷுக்கு மொபைல் போன் மூலம் தகவல் கொடுத்தனர்.


தினேஷ் குடும்பத்தினர் கீழே இறங்கி பார்க்க வரும் பொழுது, தீ அதற்குள் கொழுந்துவிட்டு டாட்டா இண்டிகா கார் மற்றும் அப்பாச்சி மற்றும் ஸ்கூட்டி ஆகிய இரண்டு இரு சக்கர வாகனங்கள் எரிந்தது. தீ விபத்து குறித்து குமாரபாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததுடன் பின்பக்க வழியாக வெளியேறி விட்டனர். விரைந்து வந்த தீனைப்புத்துறையினர் முன்பக்க கதவை திறக்க இயலாமல் கதவை உடைத்துக் கொண்டு சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து குறித்து இதுவரை காரணம் ஏதும் தெரியாத சூழ்நிலை நீடித்து வருகிறது. மின் கசிவின் காரணமாகவோ அல்லது வாகனத்தின் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகவோ தீ விபத்து ஏற்பட்டு இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குமாரபாளையம் போலீசார் வழக்கு விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!