அரசு பஸ்ஸை முந்தி செல்ல டூவீலர் ஓட்டுனர் முயன்ற போது 19 வயது பெண் பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

அரசு பஸ்ஸை முந்தி செல்ல டூவீலர் ஓட்டுனர் முயன்ற போது 19 வயது பெண் பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு
X
குமாரபாளையத்தில் அரசு பஸ்ஸை முந்தி செல்ல டூவீலர் ஓட்டுனர் முயன்ற போது 19 வயது பெண் பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

குமாரபாளையம் சேலம் சாலை பஸ் ஸ்டாண்ட் அருகே கவரிங் கடையில் பணியாற்றி வந்தவர் திரிஷா, 19. இவர் நேற்றிரவு வேலை முடிந்து எம்.ஜி.ஆர், நகரில் உள்ள வீட்டுக்கு போக வேண்டி, வீட்டின் அருகே வசிக்கும் கோகுல், 17, என்பவருடன் நேற்றுமுன்தினம் இரவு 09:30 மணியளவில் ஹீரோ ஸ்ப்லேண்டர் பிளஸ் வாகனத்தில் ஆர்.ஏ.எஸ். தியேட்டர் அருகே சென்ற போது, முன்னால் சென்ற கே.2 அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்றார். அப்போது நிலைதடுமாறி வலது புறமாக இருவரும் கீழே விழ, பேருந்தின் பின் சக்கரம் திரிஷாவின் இடுப்பு பகுதியில் ஏறி இறங்கி, வெகு தூரம் இழுத்து சென்றது. இதில் படுகாயமடைந்த திரிஷா, அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கோகுல் தலைமறைவானார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!