Begin typing your search above and press return to search.
குமாரபாளையத்தில் 900 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
குமாரபாளையத்தில் 900 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
HIGHLIGHTS

குமாரபாளையத்தில் 900 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு திருச்செங்கோட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குமாரபாளையத்தில் 900 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
குமாரபாளையம் கண்ணகி நகர் பகுதியில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக வட்ட வழங்கல் அலுவலர் வசந்தி மற்றும் ஆர்.ஐ. ப்ரவீனுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, ரேசன் அரிசி மூட்டை ஒன்றுக்கு 50 கிலோ வீதம் 18 மூட்டைகள் தயார் நிலையில் கட்டி வைக்கப்பட்டு இருந்தன. அவைகளை பறிமுதல் செய்து திருச்செங்கோட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் தர, ரேசன் அரிசி கடத்த முயன்ற நபர்கள் யார்? என்பதை குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.