நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் சுயேச்சைகள் 9 பேர் வெற்றி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகரமன்ற தேர்தலில் 33 வார்டுகளில் 188 பேர் போட்டியிட்டதில் தி.மு.க. 14, அ.தி.மு.க. 10, சுயேச்சை 9 என வெற்றி பெற்றனர். இதில் 30வது வார்டில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. பாலசுப்ரமணி முன்னாள் நகர்மன்ற துணை தலைவராக பணியாற்றியவர்.
7வது வார்டில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வை சேர்ந்த பழனிச்சாமி, 25வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க. வெங்கடேசன் இருவரும் முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள். 24வது வார்டு தி.மு.க. கதிரவன் முன்னாள் தி.மு.க. நகர்மன்ற தலைவராக பணியாற்றியவர்.
குமாரபாளையத்தில் தி.மு.க. என்றால் ஜே.கே.கே. சுந்தரம் குடும்பமும், அ.தி.மு.க. என்றால் எஸ்.எஸ்.எம். குடும்பமும் என்பது ஊரறிந்த உண்மை. முன்னாள் முதல்வர் கருணாநிதி வந்தால் ஜே.கே.கே. சுந்தரம் வீட்டிலும், எம்.ஜி.ஆர். வந்தால் எஸ்.எஸ்.எம். குடும்பத்தார் வீட்டிலும் தங்கி பிரசார பணிகளை கவனிப்பது வழக்கம். ஜே.கே.கே. சுந்தரம் மருமகள் சுயம்பிரபா மாணிக்கம் முன்னாள் நகரமன்ற தலைவராக பணியாற்றியுள்ளார். எஸ்.எஸ்.எம். குடும்பத்தில் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற முதல் நபர் 22வது வார்டில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் புருஷோத்தமன். இந்த தேர்தலில் 20வது வார்டில் ஓய்வு பெற்ற ஆசிரியை வள்ளியம்மாள்( 74 ) சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu