குமாரபாளையத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் 840 மாணவ, மாணவியர் பங்கேற்பு

குமாரபாளையத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் 840 மாணவ, மாணவியர் பங்கேற்பு
X

குமாரபாளையம் ராயல் இன்டர்நேஷனல்பள்ளி  நீட் தேர்வு மையத்தின் நுழைவுப்பகுதியில் மாணவ, மாணவியர் சோதனைக்குப்பின் அனுமதிக்கப்பட்டனர். 

குமாரபாளையத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் 840 மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தேர்வெழுதினர்.

தமிழகம் முழுவதும் நீட் தேர்வுகள் இன்று நடைபெற்றன. குமாரபாளையம் ராயல் இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற நீட் தேர்வில், காலை 11:30 மணி முதல் மாணவ, மாணவியர் வரத் தொடங்கினர். ஒவ்வொருவர் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின் தேர்வு மையத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

மதியம் 1:30 மணி வரை மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். பேனா, கர்சீப், கால்குலேட்டர் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. பல மாவட்டங்களை சேர்ந்த 840 மாணாக்கர்கள் தேர்வெழுதினர். மாலை 2 மணி முதல் 5 மணி வரை நடைபெற்றது.

குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாணவர்கள் அனைவரும் பள்ளியின் நுழைவுப்பகுதியில் தேர்வு நிர்வாகிகளால் செயல்படுத்தப்படும் சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். டூவீலர்கள், கார்களுக்கு தனித்தனி பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!