குமாரபாளையம் நகராட்சியில் தூய்மை பணி திட்டத்தில் 8 பேர் நியமனம்

தூய்மை பணி திட்டத்தில் குமாரபாளையம் நகராட்சியில் சூப்பர்வைசர் உள்பட 8 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய பணியாளர்கள் சேர்மன் விஜய்கண்ணிடம் ஆசி பெற்றனர்.
Work of Municipal Corporation - தூய்மை பணி திட்டத்தின் கீழ் புதிய பணியாட்களை நியமிக்க கோரிக்கை எழுந்தது. இதன்படி குமாரபாளையம் நகராட்சியில் சூபர்வைசர் வெங்கடேசன், அனிமேட்டர்கள் கவுரி, வினிதா, அறிவுசெல்வன், பார்த்திபன், கவுதம், மற்றொரு கவுதம், சசிகலா ஆகியோர் பணி நியமனம் செய்யப்பட்டனர். புதியதாக பணியில் சேர்ந்தவர்கள் சேர்மன் விஜய்கண்ணனிடம் ஆசி பெற்றனர். கவுன்சிலர்கள் அழகேசன், வேல்முருகன், கோவிந்தராஜன், ஜேம்ஸ்,
சியாமளா, கனகலட்சுமி, கிருஷ்ணவேணி, நந்தனிதேவி, வேல்முருகன், கோவிந்தராஜன்,புஷ்பா நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu