குமாரபாளையத்தில் 73 ஓட்டு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைப்பு

குமாரபாளையத்தில் 73 ஓட்டு இயந்திரங்கள்   வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைப்பு
X

குமாரபாளையத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

குமாரபாளையத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி 73 ஓட்டு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

குமாரபாளையத்தில் நகர்மன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் ஏற்பாடுகள் நகராட்சி கமிஷனர் சசிகலா தலைமையில் நடைபெற்று வருகிறது. 33 வார்டுகளுக்கு 188 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 33 வார்டுகளில் 73 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சின்னங்கள் பொருத்தப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்ட அறையிலிருந்து அதிகாரிகள் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டு, 73 ஓட்டுச்சாவடிகளுக்கு டெம்போக்கள், லாரிகள் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. ஓட்டுப்பதிவு மைய அலுவலர்கள் உடன் சென்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்