குமாரபாளையத்தில் 700 மூலிகை செடிகள் நடும் விழா; நகராட்சி கமிஷனர் பங்கேற்பு

குமாரபாளையத்தில் 700 மூலிகை செடிகள் நடும் விழா; நகராட்சி கமிஷனர் பங்கேற்பு
X

மூலிகை செடிகளை நட்டு பணிகளை துவக்கி வைத்த நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு.

குமாரபாளையத்தில் 700 மூலிகை செடிகள் நடும் விழாவை நகராட்சி கமிஷனர் இன்று தொடங்கி வைத்தார்.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, விடியல் ஆரம்பம் பிரகாஷ் சார்பில் வழங்கப்பட்ட 700 மூலிகை செடிகள் நடும் விழா குமாரபாளையம் நகராட்சி பூங்காவில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு குமாரபாளையம் அரசு மருத்துவமனை சித்தா பிரிவு டாக்டர் சுகந்தி தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு பங்கேற்று மூலிகை செடிகள் நடும் விழாவை துவக்கி வைத்தார். இதையடுத்து வீடுதோறும் மூலிகை செடிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும், நடவு செய்து மூலிகை செடிகளை பராமரிக்க செய்யும் விதமாக காவேரி நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், உள்ளிட்ட பல இடங்களில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இதில், டாக்டர்கள் சுந்தரவடிவேல், பாபு ராதாகிருஷ்ணன், முரளிகுமார், சிதம்பர லட்சுமி, அமுத லட்சுமி, அருள் நந்தினி பங்கேற்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி