குமாரபாளையத்தில் 6 வேட்புமனுக்கள் நிராகரிப்பு: 244 பேர் போட்டி

குமாரபாளையத்தில் 6 வேட்புமனுக்கள் நிராகரிப்பு: 244 பேர் போட்டி
X

நகராட்சி ஆணையாளர் சசிகலா.

குமாரபாளையத்தில் 6 பேர் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 244 பேர் என உறுதி செய்யப்பட்டது.

குமாரபாளையத்தில் 6 பேர் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 244 பேர் என உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் சசிகலா கூறுகையில், குமாரபாளையம் நகராட்சி நகரமன்ற தேர்தலில் 33 வார்டுகளுக்கு 250 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில் 17வது வார்டை சேர்ந்த சத்தியபிரியா, ரேவதி, உம்சுலைமா, 25வது வார்டை சேர்ந்த சபிதா, 5வது வார்டை சேர்ந்த சவுத்ரா, 7வது வார்டை சேர்ந்த சதீஷ் ஆகிய 6 வேட்புமனுக்கள் வைப்புத்தொகை செலுத்தாமை, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் இருத்தல், முன் மொழிபவர் பெயர் வாக்காளர் பட்டியலில் தவறாக இருத்தல் உள்ளிட்ட பல காரணங்களுக்காக தள்ளுபடி செய்யப்பட்டது. இறுதியாக 244 வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் உறுதி செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு 244 பேர் போட்டியிடுகின்றனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு