குமாரபாளையத்தில் கள் விற்பனை செய்த 6 பேர் கைது

குமாரபாளையத்தில் கள் விற்பனை செய்த 6  பேர் கைது
X
குமாரபாளையத்தில் பனை மரத்தில் கள் இறக்கி விற்பனை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையத்தில் பனை மரத்தில் கள் இறக்கி விற்பனை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையம் பகுதியில் பல இடங்களில் பனை மரங்களில் கள் இறக்கி விற்பனை செய்வதாக குமாரபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் வேமன்காட்டுவலசு, ஓலப்பாளையம், வட்டமலை, கத்தேரி பிரிவு, எஸ்.எஸ்.எம்.கல்லூரி பின்புறம் உள்ளிட்ட பல இடங்களில் ரோந்து பணி மேற்கொண்டதில், வீரப்பன் 32, சின்னுசாமி 36, செல்வராஜ் 33, சந்திரன் 47, சேகர் 55, ராஜு 38, ஆகிய 6 பேர் பிடிபட்டனர். இவர்களை கைது செய்த போலீசார், விற்பனைக்காக வைத்திருந்த 22 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்து அழித்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!