57-வது தேசிய நூலக வார விழா

57-வது தேசிய நூலக வார விழா
X
குமாரபாளையத்தில் 57-வது தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டது.

57-வது தேசிய நூலக வார விழா - குமாரபாளையத்தில் 57-வது தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் கிளை நூலகம்மற்றும் வாசகர் வட்டம் சார்பில் 57-வது தேசிய நூலக வார விழா நடந்தது. நூலக வாசகர் வட்ட தலைவர் விடியல் பிரகாஷ் தலைமை வகித்தார். 130 மாணவ மாணவிகள் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவிய போட்டியில் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக கேடயம், சான்றிதழ் மற்றும் புத்தகங்களை மாவட்ட தலைமை நூலக அலுவலர் தேன்மொழி பங்கேற்று வழங்கி வாழ்த்தி பேசினார்.

போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பள்ளி மாணவி மாணவிகளுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது. மேலும் நூலக வளர்ச்சிக்கு பெரும் புரவலர் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் பாரதி ரூபாய் 5 ஆயிரம், மற்றும் புரவலர்கள் 20 பேர் தலா ஆயிரம் ரூபாய் வழங்கி, புரவலாரக தங்களை இணைத்துக் கொண்டனர். கிளை நூலகர் மாரியாயி நன்றி கூறினார்.

விழாவில் 2.ம் நிலை நூலகர் திருச்செங்கோடு சுமதி, ரோட்டரி சங்கத் தலைவர் சண்முகம், தளபதி அரிமா சங்கத் தலைவர் கதிர்வேல், தலைமை ஆசிரியை பாரதி, பஞ்சாலை சண்முகம், சண்முகசுந்தரம், தீனா, ஜமுனா, கலைவாணி, அங்கப்பன், சரவணன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்