குமாராபாளையத்தில் 56 வேட்புமனு வாபஸ்: 188 வேட்பாளர்கள் போட்டி

குமாரபாளையயத்தில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி இரவு 8 மணிக்கு மேலும் நீடித்ததால் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
குமாரபாளையத்தில் 56 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றதில், 188 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர்.
தமிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஜன. 28 முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டன. பிப். 4ல் நிறைவு பெற்ற வேட்புமனு தாக்கலில் குமாரபாளையம் நகராட்சியில் 250 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு பரிசீலனையில் 6 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 244 பேர் போட்டியிடுவதாக நகராட்சி நிர்வாகத்தினர் அறிவித்தனர். நேற்று தி.மு.க. 26, அ.தி.மு.க. 19, சி.பி.எம். 1, காங்கிரஸ் 1, ம.தி.மு.க. 1 என 56 பேர் தங்களது வேட்புமனுக்கள் திரும்ப பெற்றனர். குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகளுக்கு தி.மு.க. 28, அ.தி.மு.க. 33, பா.ஜ.க. 24, மக்கள் நீதி மய்யம் 14, அ.ம.மு.க. 12, நாம் தமிழர் கட்சி 21, சி.பி.எம். 2, தே.மு.தி.க. 8, விடுதலை சிறுத்தைகள் 1, காங்கிரஸ் 2, சி.பி.ஐ. 1, பா.ம.க. 3, ம.தி.மு.க. 1, சுயேட்சை 38 என 188 பேர் போட்டியிடுகின்றனர்.
சுயேச்சை வேட்பாளர்கள் பலர் தாங்கள் கேட்கும் சின்னங்கள் தரச் சொல்லி கேட்க, விண்ணப்பத்தில் கேட்ட சின்னங்களில் முதலிடம் என்ன சின்னம் கேட்டுள்ளீர்களோ, தேர்தல் விதிமுறைப்படி அந்த சின்னம் மட்டும்தான் வழங்க முடியும் என நகராட்சி கமிஷனர் சசிகலா திட்டவட்டமாக கூறினார். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. வேட்புமனு திரும்ப பெறுதலுக்கு பின், சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்தல் ஆகிய பணிகள் இரவு 08:00 மணிக்கு மேலும் நீடித்ததால், நகராட்சி அலுவலகத்தில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu