குமாரபாளையத்தில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது: போலீசார் அதிரடி

குமாரபாளையத்தில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது: போலீசார் அதிரடி
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையத்தில் பணம் வைத்து சூதாடியதாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். ரூ.16,100 பறிமுதல் செய்யப்பட்டது.

குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அப்போது சதீஷ்குமார் என்பவரது வீட்டின் மொட்டை மாடியில் சூதாடிக்கொண்டிருந்த 5 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் பவானியை சேர்ந்த தங்கபிரகாஷ், 46, சேகர், 46, செந்தில், 47, குமாரபாளையத்தை சேர்ந்த அங்கப்பராஜ், 41, தட்சிணாமூர்த்தி, 30, என்பது தெரியவந்தது.

இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 5 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 16 ஆயிரத்து 100 ரூபாய் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!