குமாரபாளையத்தை சேர்ந்த 4 வயது மாணவி உலக சாதனை: கலாம் அமைப்பினர் பாராட்டு
உலக சாதனை படைத்த 4 வயது மாணவி தக்சிகா.
குமாரபாளையத்தை சேர்ந்த 4 வயது மாணவி உலக சாதனை படைத்துள்ளார்.
குமாரபாளையம் காந்திநகரை சேர்ந்தவர்கள் முத்துக்குமாரசாமி (35), சரண்யா (32). இவர்களது மகள் தக்சிகா (4). குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். நர்சரி பள்ளியில் யூ.கே.ஜி.படித்து வருகிறார். இவர் மிகுந்த ஞாபகசக்தி மிக்கவராக இருந்து வந்துள்ளார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் மற்றும் பலரும் அதிசயித்தனர்.
இவரது ஆசிரியர்கள், பெற்றோர்கள் கொடுத்த பயிற்சியால் 195 நாடுகளின் கொடிகளை அடையாளம் காட்டுவதும், 195 நாடுகளின் தலைநகரின் பெயர்களை 4 நிமிடத்திற்குள் சொல்வதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அப்போது ஆன்லைன் மூலம் சென்னை கலாம் அமைப்பினர் உலக சாதனை போட்டி அறிவித்தனர்.
இதில் தக்சிகாவை பங்கேற்க வைத்து, இவரது சாதனையை 4 நிமிட வீடியோவாக எடுத்து அனுப்பி வைத்தனர். இந்த வீடியோவை பார்த்த போட்டி அறிவிப்பாளர்கள் உலக சாதனையாளராக அங்கீகாரம் செய்து, நேரில் சென்னை வரவழைத்து பரிசு, சான்றிதழ் வழங்கினார்கள். பள்ளி நிர்வாகத்தினர், நகரின் முக்கிய பிரமுகர்கள் தக்சிகாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu