சபரிமலை சேவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 40 மாணவர்கள்

சபரிமலை சேவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 40 மாணவர்கள்
X

குமாரபாளையத்திலிருந்து சபரிமலை சேவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 40 மாணவர்கள்.

குமாரபாளையத்தில் இருந்து 40 மாணவர்கள் சபரிமலை சேவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அகிலபாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் ஆண்டுதோறும் சபரிமலைக்கு சேவை செய்ய ஐயப்ப பக்தர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை பல கட்டங்களாக அனுப்பி வைப்பது வழக்கம்.

இதுவரை 165 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று தனியார் கல்லூரி மாணவர்கள் 40 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். குமாரபாளையம் ஜெட் மண்டபத்திலிருந்து இவர்களை வழியனுப்பும் விழாவிற்கு மாவட்ட செயலர் ஜெகதீஷ் தலைமை வகித்தார்.

மாவட்ட செயலர் ஜெகதீஷ் கூறியதாவது:

சபரிமலை சேவைக்கு செல்லும் மாணவர்கள் அங்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், அன்னதானம் வழங்குதல், ஆக்சிஜன் சுவாசம் வழங்குதல், உடல்நலம் பாதித்த, மயங்கி விழுந்த நபர்களை மருத்துவமனையில் சேர்த்தல், இறந்தவர்களை அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு போய் சேர்த்தல், கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்திருத்தல் உள்ளிட்ட பல சேவைகள் செய்வார்கள். ஒவ்வொரு குழுவினர் 15 நாட்கள் சேவை செய்வார்கள். இவர்கள் அங்கிருந்து புறப்படும் முன்பு அடுத்த குழுவினர் செல்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய மாநில துணை தலைவர் பாலசுப்ரமணி, மாவட்ட தலைவர் பிரபு, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்லூரி மற்றும் வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி என்.எஸ்.எஸ். அலுவலர்கள் மாதவன், அருணாராணி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி