குமாரபாளையம் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 4 இளைஞர்கள் பலி
குமாரபாளையம் அருகே விபத்தில் இறந்தவர்களின் உடல் மீட்கப்படும் காட்சி.
குமாரபாளையம் அருகே மரத்தின் மீது கார் மோதியதில் நான்கு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இது தெ தொடர்பாக குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
குமாரபாளையம் அருகே உள்ள சீராம்பாளையம் பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஸ்விப்ட் சொகுசு காரில் 5 பேர் வந்துள்ளனர். கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் குமாரபாளையம் அருகே உள்ள குப்பாண்டபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் சாலையோரம் இருந்த பனை மரத்தின் மீது மோதியதில் காரில் பயணம் செய்த தனசேகரன், லோகேஷ், சிவக்குமார், மற்றும் கவின் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் ஸ்ரீதர் என்ற இளைஞர் மட்டும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதில் அனைவருக்கும் தலா 25 வயது என கூறப்படுகிறது. இறந்தவர்கள் பள்ளிபாளையம் அருகே கிழக்கு தொட்டிபாளையம், சின்னார்பாளையம், சீராம்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்த குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கவின் உடல் மட்டும் காரின் கதவு பகுதியில் சிக்கியதால் உடலை மீட்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது .இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu