35 மது பாட்டில்கள் பறிமுதல் மூதாட்டி கைது

35 மது பாட்டில்கள் பறிமுதல் மூதாட்டி  கைது
X

குமாரபாளையம் காவல் நிலையம் பைல் படம்

குமாரபாளையத்தில் அதிக விலைக்கு விற்க கொண்டு வந்த 35 மது பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டதுடன் மூதாட்டி கைது செய்யப்பட்டார்.

குமாரபாளையத்தில் அதிக விலைக்கு விற்க கொண்டு வந்த 35 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் மூதாட்டி கைது செய்யப்பட்டார்.

குமாரபாளையம் போலீசார் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.

எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்பது தெரியவந்தது. அங்குள்ள பெட்டிக்கடை அருகே சென்று பார்த்த போது அங்கு மூதாட்டி ஒருவர் மது பாட்டில்களை விற்று வந்தார். கையும் களவுமாக சிக்கிய அவரிடமிருந்து 35 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

போலீசார் விசாரணை செய்ததில் அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரி, 60, என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!