குமாரபாளையத்தில் 30 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

குமாரபாளையத்தில் 30 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது
X

குமாரபாளையத்தில் 30 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த வழக்கில் பிடிபட்ட குற்றவாளி சுரேஷ் உடன் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. முருகேசன்.

குமாரபாளையத்தில் 30 கிலோ புகையிலை பொருட்கள், டூவீலர் பறிமுதல் செய்ததுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குமாரபாளையத்தில் 30 கிலோ புகையிலை பொருட்கள், டூவீலர் பறிமுதல் செய்ததுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குமாரபாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி, எஸ்.ஐ. முருகேசன் உள்ளிட்ட போலீசார் சுந்தரம் காலனி பகுதியில் ரோந்து பணி மேற்கொண்ட போது, சந்தேகத்திற்கு இடமான வகையில், போலீசாரை கண்டதும் டூவீலரில் திரும்பியவரை பிடித்தனர். அவர் டூவீலரில் வைத்திருந்த 2 வெள்ளை நிற சாக்கு பைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, பான் மசாலா ஆகியவை தலா 15 கிலோ வீதம், 30 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து வழக்குப்பதிவு செய்து ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ், 35, என்பவரை கைது செய்து, ஹோண்டா ஆக்டிவா வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்