குமாரபாளையத்தில் அனுமதியின்றி மது விற்ற 3 பேர் கைது

குமாரபாளையத்தில் அனுமதியின்றி மது விற்ற 3 பேர் கைது
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையத்தில் அனுமதியின்றி மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குமாரபாளையத்தில் அனுமதி இல்லாமல் அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு கே.ஒ.என். தியேட்டர், பஸ் ஸ்டாண்ட், ஆனங்கூர் பிரிவு ஆகிய பகுதிகளில் மது விற்ற நபர்கள் பவானி வேலு,45, குமாரபாளையம் சுந்தரம், 46, விஜய்குமார், 30, ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 44 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!