குமாரபாளையத்தில் 3 பயணிகள் நிழற்கூடம் அமைக்க பூமி பூஜை

குமாரபாளையத்தில் 3 பயணிகள் நிழற்கூடம்  அமைக்க பூமி பூஜை
X

குமாரபாளையத்தில் நகராட்சி சார்பில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க பூமிபூஜை போடப்பட்டது.

ராஜேஷ்குமார் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் குமாரபாளையத்தில் 3 இடங்களில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.

மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் குமாரபாளையத்தில் 3 இடங்களில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022-2023 பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ராஜம் தியேட்டர், ஆனங்கூர் பிரிவு, பள்ளிபாளையம் பிரிவு , ஆகிய மூன்று பேருந்து நிறுத்த இடங்களில் தலா ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பூமி பூஜை நடந்தது.

இதில் ஆணையர் சரவணன், நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், பொறியாளர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்று பூமி பூஜை செய்தனர். நகராட்சி துணை தலைவர் வெங்கடேசன், நகர மன்ற உறுப்பினர்கள் அழகேசன், கோவிந்தராஜன், விஜயா கந்தசாமி, பொறுப்புக்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், கந்தசாமி, மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ஜூல்பிகார் அலி, முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஐயப்பன் மற்றும் திமுக நிர்வாகிகள் கந்தசாமி, கதிரேசன், விக்னேஷ், ஹரி பாலாஜி, நகராட்சி பணி மேற்பார்வையாளர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையத்தில் மழைநீர் வடிகால் அமைக்க நமக்கு நாமே திட்டத்தில் தனியார் நிதி உதவி வழங்கினார்.

குமாரபாளையம் 15 வது வார்டு குள்ளங்காடு கலைவாணி தெருவில் சிறுபாலம் அமைத்து மழை நீர் வடிகால் அமைக்க நமக்கு நாமே திட்டத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் திட்ட வரைவு தயார் செய்யப்பட்டது. திட்டத்திற்கு பொதுமக்களின் பங்களிப்பு தொகையான ரூபாய் ஒரு லட்சத்து 10 ஆயிரத்திற்கான காசோலையை அப்பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி டெக்ஸ்டைல்ஸ் நாகராஜ் என்பவர் நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் முன்னிலையில், நகராட்சி தலைவர் விஜய்கண்ணனிடம் வழங்கினார். நகர மன்ற உறுப்பினர்கள் கோவிந்தராஜன், ஜேம்ஸ், அழகேசன், வேல்முருகன், தி.மு.க. நிர்வாகிகள் செந்தில்குமார், கந்தசாமி, விக்னேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story