குமாரபாளையத்தில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்: போலீசார் விசாரணை

குமாரபாளையத்தில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்: போலீசார் விசாரணை
X

குமாரபாளையம் காவல் நிலையம்

குமாரபாளையத்தில் 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குமாரபாளையம் நகரின் பல இடங்களில் அதிகளவில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். பள்ளிபாளையம் சாலை, பெருமாபாளையம் புதூர் பகுதியில் ரோந்து சென்ற போது, அங்கு ஒருவர் கட்டைப்பை வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்.

அப்போது போலீசாரை கண்டதும் அவர் பையை போட்டுவிட்டு தப்பியோடினார். இதனையடுத்து அந்த பையை சோதனை செய்த போது அதில் மூன்று கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!