குமாரபாளையம் அருகே பக்கவாட்டு சுவற்றில் கார் மோதி 3 பேர் படுகாயம்

குமாரபாளையம் அருகே பக்கவாட்டு சுவற்றில் கார் மோதி 3 பேர் படுகாயம்
X

குமாரபாளையம் அருகே பக்கவாட்டு சுவற்றில் கார் மோதி விபத்துக்குள்ளானது.

குமாரபாளையம் அருகே பக்கவாட்டு சுவற்றில் கார் மோதிய விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

குமாரபாளையம் அருகே நேற்றுமுன்தினம் இரவு 11:00 மணியளவில் வல்வில் ஓரி நண்பர்கள் ஆடிப்பேருக்கு திருவிழா பணிகள் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். அப்போது திருச்செங்கோடு பக்கமிருந்து வேகமாக வந்த மாருதி கார் வடிகால் பாலத்தின் பக்கவாட்டு சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் ஓட்டி வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண், சுமார் 50 வயது மதிக்கத்தக்க அவரின் தாயார், மற்றும் 5 வயதுள்ள மகன் ஆகிய மூவரும் படுகாயமடைந்தனர். இவர்கள் மூவரையும் ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் ஜி.ஹெச்.சுக்கு வல்வில் ஓரி நண்பர்கள் அனுப்பி வைத்தனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது