காட்டெருமையை இரவு பகலாக தேடி வரும் 3 மாவட்ட வனத்துறையினர்

குமாரபாளையம் அருகே காட்டெருமையை தேடி வனத்துறையினர் முகாமிட்டு தேடி வருகின்றனர்.
குமாரபாளையத்தில் 3 மாவட்ட வனத்துறையினர் காட்டெருமையை இரவு பகலாக தேடி வருகின்றனர்.
இது குறித்து நாமக்கல் மாவட்ட வன சரக அலுவலர் பெருமாள் கூறுகையில், குமாரபாளையம் கத்தேரி பிரிவு அருகே காட்டெருமை மேய்வதை கண்ட பொதுமக்கள் சிலர் அச்சத்தில் அங்கிருந்து விலகி சென்றனர்.
இது குறித்து தீயணைப்பு படையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தரப்பட்டது. டீச்சர்ஸ் காலனி, சிவசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் எருமையை பார்த்ததாக பலர் கூறியதால் இரவிலும் தேடி வந்தோம். குப்பாண்டபாளையம் பகுதியில் உள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்று இந்த பகுதியில் சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்ட வனத்துறை அலுவலர்கள், ஊழியர்கள் ஈரோடு மாவட்ட வன அலுவலர் கவுதம் தலைமையில் 40க்கும் மேற்பட்டோர் தேடி வருகிறோம்.
இது ஏற்காடு பகுதியில் இருந்து மெல்ல மெல்ல இந்த பகுதிக்கு வந்துள்ளது. ட்ரோன் கேமரா மூலமும் தேடி வருகிறோம். இப்பகுதியில் கரும்பு தோட்டங்கள் அதிகம் உள்ளதால் அதற்குள் புகுந்துள்ளது. விரைவில் பிடித்து விடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று மாலை 06:30 மணியளவில் சமயசங்கிலி தடுப்பணை பகுதியில் உள்ளதாக தகவல் கிடைத்து வனத்துறையினர் அங்கு முகாமிட்டு தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu