குமாரபாளையத்தில் சதித்திட்டம் தீட்டிய 3 கொலைக் குற்றவாளிகள் கைது

குமாரபாளையத்தில் சதித்திட்டம்  தீட்டிய 3 கொலைக் குற்றவாளிகள் கைது
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையத்தில் சதித் திட்டம் தீட்டியதாக 3 கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் அம்மா உணவகம் அருகே முன்னாள் கொலை குற்றவாளிகள் 3 பேர் சதி திட்டம் தீட்டிக்கொண்டிருப்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கையும் களவுமாக கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். விசாரணையில் குமாரபாளையம் நடராஜா நகரை சேர்ந்த சக்திவேல், 24, கிழக்கு காந்திபுரம் பகுதியை சேர்ந்த தேவராஜ், 24, திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த ரவி, 22, என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், கைது செய்யப்பட்ட மூன்று பேரும் ஒன்று சேர்ந்து ''நாம் ஏற்கனவே கொலை குற்றங்கள் செய்த போது, நம் மீது பொதுமக்களுக்கு பயம் இருந்தது. தற்போது அந்த பயம் இல்லை. பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில்,பயம் ஏற்படுத்தும் வகையிலும், நாம் ஒன்று சேர்ந்து ஏதாவது பொது சொத்திற்கு சேதம் ஏற்படுத்தினால்தான் தங்களை பெரிய ரவுடிகள் என நினைத்து பயம் வரும்'' என சம்பவ இடத்தில் திட்டமிட்டுக்கொண்டிருந்தார்கள் என தெரிவித்தனர்.

Tags

Next Story
ai in future agriculture