குமாரபாளையம் அருகே கஞ்சா விற்றதாக 3 பேர் கைது: போலீசார் அதிரடி

குமாரபாளையம் அருகே கஞ்சா விற்றதாக 3 பேர்  கைது: போலீசார் அதிரடி
X
குமாரபாளையம் காவல் நிலையம்.
குமாரபாளையம் அருகே கஞ்சா விற்றதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

குமாரபாளையம் அருகே அபெக்ஸ் காலனி, பழைய காவேரி பாலம் பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ.க்கள் மலர்விழி, நந்தகுமார், சேகரன், சிவக்குமார், எஸ்.எஸ்.ஐ. முருகேசன், உள்ளிட்ட போலீசார் நேரில் சென்று அங்கு கஞ்சா விற்றுக்கொண்டிருந்த நபர்களை கையும், களவுமாக பிடித்தனர்.

விசாரணையில், அரசு மேல்நிலைப்பள்ளி சாலையில் வசிக்கும் நவீன்குமார், 21, பவானி வாசவி கல்லூரி பஸ் நிறுத்தம் பகுதியை சேர்ந்த தயாநிதி, 30, குமாரபாளையம், பாலிக்காடு பகுதியை சேர்ந்த ஈஸ்வரன், 45, என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து தேனி மாவட்டத்திலிருந்து விற்பனை செய்ய கொண்டு வந்த 450 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

Tags

Next Story
agriculture iot ai