குமாரபாளையத்தில் பரபரப்பு: 3 அதிமுக கவுன்சிலர்கள் போலீசில் புகார்

குமாரபாளையம் போலீசில் புகார் அளித்த 3 பெண் கவுன்சிலர்கள்.
குமாரபாளையம் நகராட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய்கண்ணன், நகர மன்ற தலைவர் தேர்தலில் 18 ஓட்டுக்கள் பெற்று தலைவரானார். இவருக்கு அ.தி.மு.க மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் அதரவு கொடுத்தனர்.
இதனிடையே, ஆதரவு கொடுத்த 3 கவுன்சிலர்களின் வீடுகளுக்கு நேற்று முன்தினம் அ.தி.மு.க.வினர் சென்ற்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கவுன்சிலர்கள் நந்தினிதேவி, பூங்கொடி, ரேவதி ஆகியோர் தங்கள் குடும்பத்தார் உயிர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று, குமாரபாளையம் போலீசில் புகார் மனு கொடுத்தனர்.
இது குறித்து முன்னாள் அ.தி.மு.க. நகர செயலர் நாகராஜன் கூறியதாவது: சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் தங்கமணி, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 10 பேரையும் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க. உறுப்பினருக்கு வாக்களிக்க வேண்டுமாறு கூறினார்.
இதில் உடன்பாடு இல்லாத கவுன்சிலர்கள் ரேவதி, பூங்கொடி, நந்தினிதேவி ஆகியோர் சுயேச்சை உறுப்பினருக்கு ஓட்டளித்து நகரமன்ற தலைவராக வெற்றி பெற வைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க.வை சேர்ந்த பாலசுப்ரமணி, புருஷோத்தமன், பாஸ்கரன், ரவி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் 3 கவுன்சிலர் வீடுகளுக்கும் சென்று உங்களை ஊரில் இருக்க விடமாட்டோம், என மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு குமாரபாளையம் போலீசில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் செலவிற்கு பணம் தந்ததாக பொய் புகார் கூறி மிரட்டியுள்ளனர். யார், யாரிடம் எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என நிருபிக்க சொல்லுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu