2ம் கட்டமாக ஆயிரம் பனை விதைகளை விதைத்த வல்வில் ஓரி அமைப்பினர்

2ம் கட்டமாக ஆயிரம் பனை விதைகளை விதைத்த வல்வில் ஓரி அமைப்பினர்
X

குமாரபாளையம் அருகே வீரப்பம்பாளையம் வாய்க்கால்கரையில் பனை விதைகள் விதைக்கப்பட்டன.

குமாரபாளையம் அருகே வல்வில் ஓரி அமைப்பினர் 2ம் கட்டமாக ஆயிரம் பனை விதைகளை நட்டனர்.

குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு பகுதியில் வீரப்பம்பாளையம் முதல் பழனி கவுண்டம்பாளையம் வரையில் மேட்டூர் கிழக்கு கரை வாய்க்கால் கரையில் கடந்த ஆண்டு ஆயிரம் பனை விதைகள் வல்வில் ஓரி, சிறகுகள் அமைப்புகள் சார்பில் விதைக்கப்பட்டன.

தினமும் தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்தனர். இது தற்போது வாய்க்கால் கரைகளில் வளர்ந்து எழிலாக காட்சியளிக்கிறது. இது பற்றி நிர்வாகி விஸ்வநாதன் கூறியதாவது:

பனை மரங்கள் வளர்க்க எண்ணி முதல் கட்டமாக ஆயிரம் பனை விதை நட்டோம். இது நன்கு வளர்ந்து வந்துள்ளது. இதே போல் இந்த ஆண்டு மேலும் ஆயிரம் பனை விதைகள் நட்டுள்ளோம். பொதுமக்களும் அதிக பலன் தரும் பனை மரங்கள் வளர்ப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிர்வாகிகள் விஜயகுமார், தீபக், அன்பழகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
ai future project