நகராட்சி மேற்கொண்ட சோதனையில் 22 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
குமாரபாளையம் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் குமரன், உத்திரவின் பேரில் நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யும் பணி நடந்தது. குமாரபாளையம் நகரில் உள்ள ஓட்டல்கள், பூக்கடைகள், பேக்கரிகள், பழக்கடைகள், மொத்த வர்த்தக கடைகள், சாலையோர கடைகள், வர்த்தக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், ஒரு முறை பயன்படுத்தப்படும் டம்ளர்கள், மற்றும் பிற பொருட்கள் 22 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களுக்கு 8 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் சுகாதார ஆய்வர்கள் சந்தானகிருஷ்ணன், ஜான் ராஜா, துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
குமாரபாளையம் நகராட்சி பகுதியில் சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து, போதை பொருட்கள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
குமாரபாளையம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பள்ளிகளுக்கு அருகில் அமைந்துள்ள அனைத்து கடைகளில், புகையிலைப் பொருட்கள் மற்றும் போதை தரும் மிட்டாய்கள், விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்யுமாறு நகராட்சி ஆணையர் குமரன் உத்திரவிட்டதின் பேரில், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சந்தானகிருஷ்ணன், ஜான் ராஜா, துப்புரவு மேற்பார்வையாளர்கள் வள்ளி, கலைவாணி, ஞானசேகரன், சுப்பிரமணியன், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் கவுதம், அறிவுசெல்வம், கவுதம் ஆகியோர் கொண்ட குழுவினர் மூன்று நாட்களாக மேற்படி கடைகளில் ஆய்வு செய்தனர். காலாவதியான மிட்டாய்கள், உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. புகையிலைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து குமாரபாளையம் நகராட்சி ஆணையர் குமரன் விடுத்துள்ள அறிக்கையில், நகரின் பல்வேறு இடங்களில் 32 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. விதிமுறை மீறி விற்பனை செய்தமைக்கு 7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. நகர்ப்பகுதியில் பள்ளிச் சிறார்களுக்கு போதை தரும் மிட்டாய் வகைகள், புகையிலை பொருட்கள், விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் உரிய நபர்கள் மீது ஒரு லட்சம் அபராதம் விதிப்பதுடன், குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu