மாற்றியமைக்கப்பட்ட அரசு தட்டச்சு தேர்வில் 2,152 பேர் பங்கேற்பு

மாற்றியமைக்கப்பட்ட அரசு தட்டச்சு தேர்வில் 2,152 பேர் பங்கேற்பு
X

குமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற அரசு தட்டச்சு தேர்வு.

குமாரபாளையம் தனியார் கல்லூரியில் இரு நாட்கள் நடைபெறவுள்ள அரசு தட்டச்சு தேர்வு இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.

தமிழக தொழில்நுட்ப தேர்வு வாரியம் சார்பில் அரசு தட்டச்சு தேர்வு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். குமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள அரசு தட்டச்சு தேர்வுகள் இன்று துவங்கியது. தேர்வு கண்காணிப்பாளரும் கல்லூரி முதல்வருமான விஜயகுமார் தேர்வினை துவக்கி வைத்தார்.

ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 40 தட்டச்சு பயிற்சி மைய மாணவ, மாணவியர்கள் 2 ஆயிரத்து 152 பேர் பங்கேற்றனர். இதுவரை இல்லாத அளவில் இந்த தேர்வு முறை முதன் முதலாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு தட்டச்சு மற்றும் கணினி பயிற்சி பள்ளிகள் சங்க தலைவர் செந்தில் கூறுகையில், தட்டச்சு தேர்வு இதுவரை ஸ்பீடு முதல் தாளாகவும், செயல்முறை இரண்டாம் தாளாகவும் இருந்து வந்தது. முதல் தாள் ஸ்பீடு தேர்வு என்பதால், வேகமாக தட்டச்சு செய்வதில் பலருக்கும் தடுமாற்றம் ஏற்பட்டு வருவதை கருத்தில் கொண்டு, ஸ்பீடு இரண்டாம் தாளாக வைத்துக்கொள்ள அரசிடம் எங்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைத்தோம்.

இதனை கனிவுடன் பரிசீலித்த அரசு நிர்வாகம், எங்கள் கோரிக்கையை ஏற்று, செயல்முறை முதல் தாளாகவும், ஸ்பீடு இரண்டாம் தாளாகவும் வைத்துகொண்டு தேர்வு நடத்த ஒப்புதல் தெரிவித்தது. இதற்காக சங்கம் சார்பிலும், மாணவ, மாணவியர்கள் சார்பிலும் தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஈரோடு மாவட்ட செயலர் வேலுமணி, பொருளர் நடராஜன், செயற்குழு உறுப்பினர் தங்கமணி, மைய பொறுப்பாளர் ஜான் மில்டன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story