குமாரபாளையத்தில் 2 மணி நேரம் பெய்த தொடர் மழை: வியாபாரிகள் கலக்கம்

குமாரபாளையத்தில் 2 மணி நேரம் பெய்த தொடர் மழை: வியாபாரிகள் கலக்கம்
X

குமாரபாளையம் பகுதியில் பெய்த மழை.

குமாரபாளையத்தில் 2 மணி நேரமாக பெய்த தொடர் மழையால் மக்கள் கூட்டமின்றி வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

குமாரபாளையத்தின் அனைத்து கோவில்களிலும் நவராத்திரி விழா தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் பூஜை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.

மேலும் ஆயூதபூஜை, விஜயதசமிக்கு பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களையும் வாங்கி வருகின்றனர். நகரில் ஆங்காங்கே வாழை, பூ, பொரி, பூஜை பொருட்கள் உள்ளிட்டவவைகள் விற்பனை செய்யும் கடைகள் என தற்காலிகமாக அதிகளவில் அமைக்கபட்டுள்ளன.

நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை வருவதையொட்டி, துணிக்கடைகள், நகைக்கடைகள், ஆகியவற்றில் பொதுமக்கள் திரண்டு வருகின்றனர். தங்கள் வசதிக்கேற்ப சாலையோர துணிக்கடைகளில் துணிமணிகள் வாங்கும் நபர்களும் வாங்கி வருகின்றனர்.

கொரோனா பாதிப்பால் துவண்டு போயிருந்த வியாபாரம் தற்போதுதான் சற்று சூடு பிடிக்க துவங்கியுள்ளது. இந்நிலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்ததால் அனைத்து வியாபாரிகளும் வியாபாரமில்லாமல் தவிப்புக்கு ஆளாகினர்.

Tags

Next Story
ai powered agriculture