2 நாட்கள் வரலாற்று பயணம் மேற்கொண்ட குமாரபாளையம் தமிழறிஞர்கள்

2 நாட்கள் வரலாற்று பயணம் மேற்கொண்ட  குமாரபாளையம் தமிழறிஞர்கள்
X

குமாரபாளையத்தை சேர்ந்த தமிழறிஞர்கள் இரண்டு நாட்கள் வரலாற்று பயணம் மேற்கொண்டனர்.

Trip Memes Tamil-குமாரபாளையத்தை சேர்ந்த தமிழறிஞர்கள் சிலர் இரண்டு நாட்கள் வரலாற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

குமாரபாளையத்தை சேர்ந்த தமிழறிஞர்கள் சிலர் இரண்டு நாட்கள் வரலாற்று பயணம் சென்றனர்.

Trip Memes Tamil-வழக்கமாக எல்லோரும் சுற்றுலா சென்றால் பழனி, திருப்பதி, ராமேஸ்வரம், உள்ளிட்ட கோவில்கள், இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டி. கொடைக்கானல், ஏற்காடு, கொல்லிமலை, ஆகிய பகுதிகளுக்கு செல்வார்கள்.

குமாரபாளையம் இலக்கியதளம் அமைப்பின் சார்பில் தமிழறிஞர்கள் சிலர் கீழடி, திருமலை நாயக்கர் மகால், காந்தி அருங்காட்சியகம், சித்தன்னவாசல், திருமயம், மூவர் கோவில், குடுமியான் மலை, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னியின் செல்வன் கதை சார்ந்த கொடும்பாளூர் சிவன் பார்வதி, உமா மகேஸ்வரி ஆகிய இரு மனைவியுடன் காட்சி தரும் ஆலயம், அதே ஊரில் ஆதித்த கரிகாலனை கொலை செய்யும் இடம் உள்ளிட்ட வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு இந்த இலக்கிய தளம் தமிழறிஞர் குழுவினர் சென்றனர். இது போன்ற சுற்றுலாவை தொடங்கி வைத்த இலக்கியதளம் அமைப்பினர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.


இது குறித்து அதன் நிர்வாகிகள் கூறியதாவது:-

தமிழ்நாட்டின் சிறப்புக்கள் பற்றி நாம் இன்னும் நேரில் கண்டு அறிந்து கொள்ளவேண்டியது நிறைய உள்ளது. நாம் நம் பிள்ளைகளை இது போன்ற வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு அழைத்து சென்று காட்டினால்தான் தமிழ்மொழியின் சிறப்புக்கள், தமிழ்நாட்டின் பெருமைகள் குறித்து அறிந்து கொள்ள முடியும். முதல் முயற்சியாக இந்த வரலாற்று பயணம் துவங்கியுள்ளோம். இது மேலும் தொடரும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் AI பற்றி நீங்களும்  தெரிந்து கொள்ளுங்கள்!