சிறுமிக்கு போடபட்ட 16 கோடி மதிப்பு ஊசி மருந்து: பெற்றோர் தகவல்

சிறுமிக்கு போடபட்ட 16 கோடி மதிப்பு ஊசி மருந்து:  பெற்றோர் தகவல்
X

சிறுமி மித்ரா.

தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 16 கோடி மதிப்பிலான ஊசி மருந்து சிறுமி மித்ராவுக்கு செலுத்தப்பட்டது.

குமாரபாளையத்தில் தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு செலுத்தப்பட வேண்டிய 16 கோடி மதிப்பு ஊசி மருந்து சிறுமி மித்ராவுக்கு செலுத்தப்பட்டது, மேலும் இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்ததாக பெற்றோர் தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து சிறுமி மித்ராவின் தந்தை சதீஸ்குமார் கூறியதாவது:

எங்கள் மகள் மித்ரா தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். இவரது சிகிச்சைக்காக ஸ்வட்சர்லாந்து நாட்டில் தயாரிக்கப்படும் ஊசி மருந்து தேவைப்பட்டது. இதன் விலை 16 கோடி ரூபாய். இதை இந்தியாவில் இறக்குமதி செய்ய 6 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்று கூறினர். பொதுமக்கள் கொடுத்த நன்கொடை மூலம் 16 கோடி ரூபாய் சேர்ந்து விட்டது. பொதுமக்கள் கொடுத்த பணம் மருந்திற்கு சரியாக இருந்தது.

இறக்குமதி வரி ரத்து செய்தால் மட்டுமே இந்த மருந்து எங்கள் மகளுக்கு கிடைக்கும் எனும் நிலை இருந்து வந்தது. பிரதமர் உள்ளிட்ட அனைத்து தலைவர்கள், அதிகாரிகள் பெரிய மனது வைத்து இந்த இறக்குமதி வரியை ரத்து செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம். கடவுள் அருளால் மத்திய அரசு இந்த இறக்குமதி வரி 6 கோடி ரூபாய் ரத்து செய்தனர். இன்று இதற்கான கடிதம் ஈ மெயில் மூலம் அனுப்பி வைத்திருந்தார்கள். நேற்று எங்கள் மகள் மித்ராவுக்கு பெங்களுர் மருத்துவமனையில் அந்த ஊசி மருந்து செலுத்தப்பட்டது. ஓரிரு நாட்கள் சிகிச்சைக்கு பின் குமாரபாளையம் வந்து விடுவோம். எங்கள் மகள் வாழ உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி . இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil