ராயல் இன்டர்நேஷனல் பள்ளியில் 15வது ஆண்டு விழா
படவிளக்கம் : குமாரபாளையம் ராயல் இன்டர்நேஷனல் பள்ளியின் விளையாட்டு விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுடன் பள்ளி நிர்வாகிகள், மற்றும் சிறப்பு விருந்தினர்கள்.
குமாரபாளையம் ராயல் இன்டர்நேஷனல் பள்ளியில் 15வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
ராயல் இண்டர்நேஷனல் சி. பி.எஸ்.சி பள்ளியின் 15ஆம் ஆண்டு விளையாட்டு விழா பள்ளி மைதானத்தில் கொண்டாடப்பட்டது
தாளாளர் அன்பழகன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் கோகிலா பங்கேற்று, மாணவ, மாணவியரின் அணிவகுப்பு மரியாதயை ஏற்று, வாழ்த்தி பேசினார்.
ஒலிம்பிக் தீபம் ஏந்தி வரப்பட்டு, அதற்கு அனைவரும் மரியாதை செலுத்தினர். விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுதந்திர சிறகுகள் ,நம்பிக்கை,இராணுவ வீரர்களின் சேவை மனப்பான்மை போன்ற தலைப்புகளில் குழந்தைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் கராத்தே ,யோகா, உடற்பயிற்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளியின் நான்கு அணிகளான ஆகாஷ், அக்னி , ஜல்,ஹவா இடையே பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ,மாணவியருக்கு பரிசுகளும், கேடயம் மற்றும் கோப்பைகளும் வழங்கப்பட்டன .நாளைய பசுமைப் புரட்சியாக, 1400 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிறப்பு விருந்தினரால் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது
பள்ளியின் செயலாளர் முருகேசன், பொருளாளர் கவிதா ஆனந்தன், முதல்வர் அனிதா ஆன்ட்ரூ, பள்ளியின் குழு உறுப்பினர்கள், ஸ்ரீ வாரி அறக்கட்டளையின் அங்கத்தினர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu