பள்ளிபாளையம் அருகே பறிமுதல் செய்யப்பட்ட 13 அடி உயர விநாயகர் சிலை

பள்ளிபாளையம் அருகே பறிமுதல் செய்யப்பட்ட 13 அடி உயர  விநாயகர் சிலை
X

பள்ளிபாளையம் அருகே பறிமுதல் செய்யப்பட்ட 13 அடி உயர விநாயகர் சிலை.

பள்ளிபாளையம் அருகே 13 அடி விநாயகர் சிலை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

பள்ளிபாளையம் அருகே 13 அடி உயர விநாயகர் சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் விநாயகர் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த வட்ராம்பாளையம் பகுதியில் சிலை தயாரிப்பு கூடத்தில் இருந்து 13 அடி உயர விநாயகர் சிலையை டாட்டா ஏஸ் வாகனத்தில் எடுத்துக் கொண்டு சென்றனர். சிலையின் உயரம் அதிகமாக இருந்ததால் செல்லும் வழியில் மின்சார வயர்கள் தடுத்ததால் அவர்கள் மெதுவாக வாகனத்தை ஓட்டி சென்றனர்.

ஆனங்கூர் ரயில்வே கேட்பகுதியில் சென்ற பொழுது சிலை செல்ல முடியாததால், அவ்வழியாக வந்த டி.எஸ்.பி. இமயவரம்பன், சிலையின் உயரத்தை பார்த்து உடனடியாக பள்ளிபாளையம் காவல் ஆய்வாளருக்கு தகவல் அளித்து, அந்த சிலையை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன் பேரில் பள்ளிபாளையம் போலீசார் விநாயகர் சிலையை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!