குமாரபாளையத்தில் கொரோனா சிகிச்சையில் 13 பேர்

குமாரபாளையத்தில்  கொரோனா சிகிச்சையில் 13 பேர்
X
குமாரபாளையத்தில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி (பைல் படம்)
குமாரபாளையத்தில் 13 பேர் கொரோனா சிகிச்சை எடுத்து வருகின்றனர் என்று நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

குமாரபாளையத்தில் 13 பேருக்கு கொரோனா சிகிச்சையளிக்கப்படுகிறது. இது பற்றி ஆணையர் ஸ்டான்லிபாபு கூறியதாவது:

மொத்த பாதிப்பு எண்ணிக்கை - 661

நோய் குணமாகி வீட்டிற்கு சென்றவர்கள் 624

இறப்பு -24,

கொரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் 13 பேர் இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா நோய் பாதிப்பு நாள் ஒன்றுக்கு 2, 3 என்ற அளவில்தான் இருந்து வந்தது. நாமக்கல் மாவட்ட அளவில் நோய் தொற்று பரவி வரும் நிலையில் குமாரபாளையத்திலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பொதுமக்கள் முக கவசங்கள், கிருமிநாசினி மருந்து பயன்படுத்தி நோய் வராமல் இருக்க முயற்சிக்க வேண்டும். இவ்வாறு ஆணையர் தெரிவித்தார்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!