11வது வார்டில் குப்பைகள் அகற்றம்

X
குமாரபாளையம் நகராட்சி 11வது வார்டில் குப்பைகள் அகற்றப்பட்டது
By - K.S.Balakumaran, Reporter |28 July 2022 8:00 PM IST
குமாரபாளையம் 11வது வார்டில் குப்பைகள் அகற்றப்பட்டது.
குமாரபாளையம் நகராட்சி 11வது வார்டில் குப்பைகள் அகற்றும் பணி நடைபெற்றது.
தமிழக முதல்வரின் வழிகாட்டுதலில் தூய்மைக்கான மக்கள் இயக்க செயல்பாட்டின்படி, குமாரபாளையம் நகராட்சியை குப்பையில்லா நகரமாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகராட்சித்தலைவர் விஜய்கண்ணன் உத்தரவின்படி நகரின் அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணியாளர்கள் குப்பைகள் முழுவதுமாக தினமும் அகற்றி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக 11வது வார்டில் குப்பைகள் முழுவதுமாக அகற்றப்பட்டது. குப்பைகள் கொட்டப்பட்ட இடத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்தார். இதில் கவுன்சிலர் ஜேம்ஸ், அழகேசன், வேல்முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu