சபரிமலைக்கு 11 டன் உணவுப்பொருட்கள் அனுப்பிய ஐயப்பா சேவா சங்கத்தினர்

சபரிமலைக்கு 11 டன் உணவுப்பொருட்கள்   அனுப்பிய ஐயப்பா சேவா சங்கத்தினர்
X

குமாரபாளையத்தில், அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தார் சார்பில் 11 டன் உணவுப்பொருட்கள் சபரிமலைக்கு,  மாவட்ட செயலர் ஜெகதீஷ் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டது.

குமாரபாளையம் அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தார் சார்பில், 11 டன் உணவுப்பொருட்கள் சபரிமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

நாமக்கல் மாவட்ட அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தார் சார்பில் ஆண்டுதோறும் அன்னதானத்திற்கு உணவுப்பொருட்கள் வழங்குதல், கோவிலில் சேவை செய்ய கல்லூரி மாணவர்களை அனுப்பி வைத்தல், இலவச மருத்துவ முகாம்கள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் செய்யப்படுகின்றன.

இதில் ஒரு கட்டமாக வைகாசி மாத சபரிமலை அன்னதானத்திற்கு நாமக்கல் மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தார் சார்பில், 11 டன் உணவுப்பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்வு மாவட்ட செயலர் ஜெகதீஷ் தலைமையில் நடைபெற்றது. மத்திய மாநில துணை தலைவர் பாலசுப்ரமணியம் தலைமையில் 118 சேவையாளர்கள் ஒரு பஸ், 4 வேன்கள், ஒரு லாரி, 4 கார்கள் மூலம் புறப்பட்டனர். மாவட்ட தலைவர் பிரபு, பொருளர் செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!