குமாரபாளையம் அருகே கன மழையால் கோவில் மீது சாய்ந்த 100 ஆண்டு பழமையான மரம்

குமாரபாளையம் அருகே கன மழையால் கோவில் மீது சாய்ந்த 100 ஆண்டு பழமையான மரம்
X

குமாரபாளையம் அருகே கன மழையால் 100 ஆண்டு பழமையான மரம் கோவில் மீது சாய்ந்தது.

குமாரபாளையம் அருகே கன மழையால் 100 ஆண்டு பழமையான மரம் கோவில் மீது சாய்ந்து விழுந்தது.

குமாரபாளையம் அருகே கன மழையால் 100 ஆண்டு பழமையான மரம் கோவில் மீது சாய்ந்து விழுந்தது.

குமாரபாளையம் அருகே ஆனங்கூர் சாலை கோட்டைமேடு பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இதன் அருகே 100 ஆண்டு பழமையான மரம் இருந்தது. இன்று மாலை 03:00 மணியளவில் கனமழை பெய்தது. இதனால் பழமையான அந்த மரம், அருகில் உள்ள கோவில் மீது சாய்ந்தது. கோவிலின் முகப்பில் உள்ள மாரியம்மன் சிலை மீது படும்படி, கிளைகள் சாய்ந்து இருந்ததால், உடனே அகற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வருவாய்த்துறையினர் நேரில் வந்து பார்வையிட்டனர்.

இது குறித்து அப்பகுதி ஒன்றிய கவுன்சிலர் தனசேகரன் கூறியதாவது:

இந்த கோவிலின் அருகே மழையால் 100 ஆண்டு பழமையான மரம் இருந்தது. பலத்த காற்றும், மழையும் வந்ததால், கோவிலின் முகப்பில் உள்ள மாரியம்மன் சிலை மீது படும் படியாக மரம் சாய்ந்தது. நல்லவேளையாக யாரும் அந்த இடத்தில் இல்லாததால், யாருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை. குழந்தைகள் பலரும் அதிகம் விளையாடும் இடமாக இந்த மர நிழல் இருந்து வந்தது. இந்த மரம் சாய்ந்தது இப்பகுதி பொதுமக்கள் அனைவருக்கும் வருத்தம்தான். அனைவரும் மரம் வளர்ப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story