பவானியில் 100 நாள் சாதனை, தி.மு.க.வினர் கொண்டாட்டம்

பவானியில் 100 நாள் சாதனை,  தி.மு.க.வினர் கொண்டாட்டம்
X

பவானியில் தமிழக அரசின் 100 நாட்கள் சாதனையை திமுகவினர் கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

பவானியில் அரசின் 100 நாட்கள் சாதனையை கட்சி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி திமுகவினர் கொண்டாடினர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று 100 நாட்கள் ஆனதையொட்டி, பவானி தி.மு.க. சார்பில் நகர செயலர் நாகராஜன் தலைமையில் கொண்டாடப்பட்டது.

பஸ் ஸ்டாண்ட், அந்தியூர் பிரிவு, பாத்திரக்கடை பிரிவு ஆகிய இடங்களில் கட்சி கொடியேற்றி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் 100 நாள் சாதனை குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சரவணன், அவை தலைவர் மாணிக்கராஜ், முன்னாள் நகர இளைஞர் அணி அமைப்பாளர் தவமணி, மாவட்ட பிரதிநிதிகள் ராஜசேகர், நல்லசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி